/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
100 நாள் வேலை கேட்டு விக்கிரவாண்டியில் மறியல்
/
100 நாள் வேலை கேட்டு விக்கிரவாண்டியில் மறியல்
ADDED : ஆக 01, 2025 03:06 AM

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே, 100 நாள் வேலை வழங்க கோரி நடந்த சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தொரவி கிராமத்தில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், 100 நாள் வேலையை, அவர்கள் வசிக்கும் கிராமத்திற்கு அருகிலேயே வழங்க கோரி, நேற்று காலை முண்டியம்பாக்கம், வழுதாவூர் சாலையில் மறியல் போராாட்டத்தில் ஈடுபட்டனர் .
தகவலறிந்த விக்கிரவாண்டி துணை பி.டி.ஓ., குமாரி, சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், தேவநாதன், ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் மற்றும் அரசு அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பி விரைவில் பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதனால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது.