/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அன்புமணி தலைமையில் இன்று போராட்டம்
/
அன்புமணி தலைமையில் இன்று போராட்டம்
ADDED : ஜூலை 20, 2025 12:28 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் பா.ம.க., சார்பில், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க மறுப்பதாக, தி.மு.க., அரசை கண்டித்தும், உடனடியாக சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும், மக்கள் திரள் போராட்டம் இன்று நடக்கிறது.
புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில், காலை 11:00 மணிக்கு நடக்கும் போராட்டத்திற்கு பா.ம.க., தலைவர் அன்புமணி தலைமை ஏற்று, உரையாற்றுகிறார்.
பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, எம்.எல்.ஏ.,க்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன், செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தமிழகம் முழுவதிலிருந்தும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், வன்னியர் சங்கத்தினர், பொது மக்கள் கலந்துகொள்கின்றனர்.
இதற்காக நகராட்சி திடலில் மேடை அமைத்து ஏற்பாடுகள் செய்துள்ளனர். எஸ்.பி., சரவணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும், பா.ம.க.,வினர் வாகனங்களை ஓரமாக நிறுத்தவும், கூட்டத்தை கண்காணித்து போக்குவரத்தை சீரமைக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.