நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: பாலியல் வன்முறையை கண்டித்து விழுப்புரத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் பால் வில்சென்ட் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்தும், தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்முறை சம்பவங்களை கண்டித்தும் விழுப்புரம் அரசு கலை கல்லுாரி எதிரே இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் தீபன் மற்றும் நிர்வாகிகள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.