/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
ADDED : டிச 30, 2024 06:15 AM

விழுப்புரம் : கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குதல் மற்றும் இதய நோய் தடுப்பதற்கான பென்சிலின் ஊசி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
கோலியனூர் வட்டாரத்தில், ரூமடிக் ஹார்ட் டிசீஸ் உள்ள நோயாளிகளுக்கு, குறிப்பாக மைட்ரல் ஸ்டெனோசிஸ் (எம்எஸ்) உள்ளவர்களுக்கு, தொடர்ச்சியான ரூமடிக் காய்ச்சலையும், அதன் விளைவாக ஏற்படும் வால்வு சேதத்தையும் தடுப்பத்கு, ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பென்சிலின் ஊசி செலுத்தப்படுகிறது.
அதன்படி நேற்று பென்சிலின் ஊசி செலுத்துதல் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் பிரியா பத்மாசினி தலைமை தாங்கினார். பொது சுகாதார நிபுணர் நிஷாந்த் முன்னிலை வகித்தார். ஆல் தி சில்ரன் தொண்டு நிறுவனம் மூலம் 22 நோயாளிகளுக்கு சத்துணவு பெட்டகம் வழங்கப்பட்டது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் செவிலி யர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.