ADDED : ஜன 14, 2025 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் கோவில் நகரம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
கண்டாச்சிபுரம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில், நடந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் மூர்த்தி தலைமை தாங்கினார். சாசனத் தலைவர் ரவிச்சந்திரன், லயன்ஸ் கிளப் தலைவர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஜகதீசன் வரவேற்றார். இதில் 20க்கும் மேற்பட்டோருக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சாசன செயலாளர் ரவிக்குமார், மாவட்டத் தலைவர்கள் குணசேகரன், குரு மற்றும் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். பொருளாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கண்டாச்சிபுரம் கோவில் நகர லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

