/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
லயன்ஸ் சங்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
/
லயன்ஸ் சங்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ADDED : ஜூலை 02, 2025 01:54 AM

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டையில் லயன்ஸ் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அவலுார்பேட்டையில், சித்தகிரி முருகன் லயன்ஸ் சங்கம் சார்பில், புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
சங்க தலைவர் மாது தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் செல்வி ராமசரவணன், ஊராட்சி தலைவர் செல்வம் முன்னிலை வகித்தனர்.
புதிய நிர்வாகிகள் தலைவர் சத்தியமூர்த்தி, செயலாளர்கள் முருகன், சுந்தரராஜன், பொருளாளர் அருண் செல்வம் உள்ளிட்டோரை, லயன்ஸ் மாவட்ட நிர்வாகி கனகதாரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கமல் கிஷோர் ஜெயின், சிவகந்தன் சேவை திட்டங்களை துவக்கி, புதிய உறுப்பினர்களை இணைத்து வைத்தனர்.
மஸ்தான் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
இதில் ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் சம்பத்குமார், ஆலிவர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.