/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாராந்திர குறைகேட்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
/
வாராந்திர குறைகேட்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
வாராந்திர குறைகேட்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
வாராந்திர குறைகேட்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : மே 06, 2025 05:14 AM

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 633 மனுக்கள் பெறப்பட்டது.
மேல்மலையனுார் ஒன்றியம், ஈயகுணம் நடுநிலைப்பள்ளி, சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து இறந்த மாலா வாரிசுதாரருக்கு பணி நியமன ஆணை, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பாரதிதாசன் பிறந்த நாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் 12 அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு பரிசு புத்தகம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தாட்கோ சார்பில் முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் ரூ.2,88,918 மானியத்துடன் கூடிய ரூ. 8,25,479 மதிப்பிலான சுற்றுலா வாகன சாவி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிக்கு ரூ.12,500 மதிப்பிலான சக்கர நாற்காலியை கலெக்டர் வழங்கினார்.
டி.ஆர்.ஓ., அரிதாஸ், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, தனித்துணை கலெக்டர் முகுந்தன், கலால் உதவி ஆணையர் ராஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.