/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனுாரில் நலத்திட்ட உதவி வழங்கல்
/
மேல்மலையனுாரில் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : ஆக 04, 2025 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய சேர்மன் கண்மணிநெடுஞ்செழியன் தலைமை தாங்கினார்.
மஸ்தான் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளும், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், தாசில்தார் தனலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சாந்தி, நாராயணமூர்த்தி, பி.டி.ஓ.,க்கள் ஜெய்சங்கர், சீதாலட்சுமி, துறை சார்ந்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.