/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
64 மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
/
64 மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
ADDED : டிச 13, 2024 07:19 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் 20.21 லட்சம் ரூபாய் மதிப்பில் 64 மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட 96 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஸ்கூட்டர் 5 பேருக்கும், சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் வங்கி கடன் மானியம் 16 பேருக்கு.
மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் 6,840 ரூபாய் மதிப்பில் 15 பேருக்கு. சிறப்பு சக்கர நாற்காலிகள் 7,900 ரூபாய் மதிப்பில் 10 பேருக்கு. கல்வி உதவித்தொகை 10 பேருக்கு என மொத்தம் 64 பேருக்கு 20.21 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை கலெக்டர் பழனி வழங்கினார்.

