/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
ADDED : ஜன 12, 2024 12:04 AM

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில், மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி வரவேற்றார். முன்னாள் சேர்மன் ஜனகராஜ், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் சித்திக்அலி முன்னிலை வகித்தனர்.
லட்சுமணன் எம்.எல்.ஏ., விழுப்புரம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த 1,042 மாணவர்கள், 1,428 மாணவிகள் உட்பட மொத்தம் 2,470 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்.
வளவனுார் பேரூராட்சி சேர்மன் மீனாட்சி, அரசு மகளிர் மேல்நிலை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பழனிவேல், தி.மு.க., நகர செயலாளர்கள் சக்கரை, ஜீவா, ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, பிரபாகரன், முருகவேல், கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.