/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஸ்கூட்டர்கள் வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஸ்கூட்டர்கள் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஸ்கூட்டர்கள் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஸ்கூட்டர்கள் வழங்கல்
ADDED : நவ 20, 2025 05:33 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், லட்சுமணன் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். லட்சுமணன் எம்.எல்.ஏ., பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக, மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.09 லட்சம் மதிப்பில், இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராஜசேகர், சப் கலெக்டர் (பயிற்சி) கதிர்செல்வி உள்ளிட்டோர் கலந்கொண்டுள்ளனர்.

