sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 திண்டிவனத்தில் புதிய பாலம் கட்டும் பணி: ஆபத்தான பகுதியை கடக்கும் பொது மக்கள்

/

 திண்டிவனத்தில் புதிய பாலம் கட்டும் பணி: ஆபத்தான பகுதியை கடக்கும் பொது மக்கள்

 திண்டிவனத்தில் புதிய பாலம் கட்டும் பணி: ஆபத்தான பகுதியை கடக்கும் பொது மக்கள்

 திண்டிவனத்தில் புதிய பாலம் கட்டும் பணி: ஆபத்தான பகுதியை கடக்கும் பொது மக்கள்


ADDED : மார் 02, 2026 03:36 AM

Google News

ADDED : மார் 02, 2026 03:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனத்தில் தரைப்பாலம் கட்டும் இடத்தில், ஆபத்தான நிலையில் பொது மக்கள் கடந்து செல்வதால், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

திண்டிவனம், செஞ்சி பஸ் நிறுத்தம் அருகே வேப்பஞ்சாலை சந்திப்பில் உள்ள தரைப்பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழும் நிலையில் இருந்தது. அதனைத் தொடர்ந்து, 60 லட்சம் ரூபாய் செலவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான பணிகள் கடந்த மாதம் 23ம் தேதி துவங்கியது. பாலம் கட்டும் பணி நடைபெறுவதையொட்டி, காந்தியார் திடலிலிருந்து செஞ்சி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் மற்றும் செஞ்சி பஸ் நிறுத்தத்தில் இருந்து காந்தியார் திடல் வழியாக திண்டிவனத்திற்கு வரும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இருந்த தரைப்பாலம் ஒரு மீட்டர் அகலத்தில் இருந்தது. தற்போது 4 மீட்டர் அகலத்தில், பெட்டி வடிவ பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பழுதடைந்த பாலம், செஞ்சி பஸ் நிறுத்தம் அருகே இருப்பதால் நகர பகுதியிலிருந்து வரும் மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டவர்கள் பாலம் நடைபெறும் இடத்திற்கு அருகிலுள்ள பாதை வழியாக இறங்கி, ஆபத்தான நிலையில் கடந்து, பஸ் நிறுத்தத்திற்கு செல்லும் நிலை உள்ளது.

பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பாலம் கட்டும் இடத்திற்கு அருகில் தற்காலிகமாக கடந்து செல்லும் வகையில் மாற்றுப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us