/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரேஷன் கடையை திறக்க பொதுமக்கள் கோரிக்கை
/
ரேஷன் கடையை திறக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : மார் 24, 2025 04:43 AM

திண்டிவனம்,: திண்டிவனம் கோபாலபுரத்தில் மூடிக்கிடக்கும் ரேஷன் கடையை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
கோபாலபுரத்தில், கடந்த ஆண்டு பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டது.
இந்த கடைக்கு தனியாக பணியாளர்கள் நியமிக்கப்படாததால் செயல்படாமல் மூடிக் கிடக்கிறது.
இதனால், இப்பகுதி மக்கள் 1 கி.மீ., துாரத்தில் உள்ள மானுார் ஊராட்சியில் வாடகை கட்டடத்தில் செயல்பட்ட வரும் ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் மூடிக் கிடக்கும் பகுதி நேர ரேஷன் கடையை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.
பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு கோபாலபுரத்தில் மூடிக்கிடக்கும் ரேஷன் கடையை திறந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.