/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொது விநியோக திட்ட முகாம்: விழுப்பரத்தில் 12ம் தேதி ஏற்பாடு
/
பொது விநியோக திட்ட முகாம்: விழுப்பரத்தில் 12ம் தேதி ஏற்பாடு
பொது விநியோக திட்ட முகாம்: விழுப்பரத்தில் 12ம் தேதி ஏற்பாடு
பொது விநியோக திட்ட முகாம்: விழுப்பரத்தில் 12ம் தேதி ஏற்பாடு
ADDED : ஏப் 10, 2025 04:44 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் வரும் 12ம் தேதி நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும், தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர்களால் ஏப். 12ம் தேதி குறைதீர்வு முகாம் நடத்தப்படவுள்ளது.
ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு கோரும் சேவைகள், மொபைல்போன் எண் பதிவு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரச் சான்று கோரும் கோரிக்கை மனு, பொதுவிநியோக கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனியார் கடைகளில் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் மனுவாக கொடுக்கலாம்.
இதன் மூலம், பொது விநியோக திட்டம் தொடர்பான குறைகளை தீர்த்துக்கொள்ளலாம் என, கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.