/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
/
தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
ADDED : ஜூன் 26, 2025 11:49 PM

விழுப்புரம்: விழுப்புரம் தெற்கு மாவட்டம், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி, காணை வடக்கு ஒன்றிய தி.மு.க., இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் மற்றும் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
வெங்கமூர் கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி தலைமை தாங்கினார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாநில மகளிர் பிரசார குழு செயலாளர் தேன்மொழி முன்னிலை வகித்தனர். தலைமைக் கழக பேச்சாளர் வழக்கறிஞர் ஸ்ரீராம் பேசினார்.
ஒன்றிய செயலாளர்கள் முருகன், ராஜா, முருகன், பொதுக்குழு உறுப்பினர் ஏழுமலை, ஒன்றியக்குழு துணைத் தலைவர் வீரராகவன், அரசு வழக்கறிஞர் கோபு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலாஜி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தண்டபாணி.
மாவட்ட விவசாய அணி தலைவர் பாபு ஜீவானந்தம், காணை வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் நடராஜன், ஏழுமலை, அன்பழகன், சுப்புராயன், சரவணன், ஆனந்தன், சுப்ரமணியன், பாரதி நாகராஜன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜாமணி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.