/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மழை நிவாரணம் கேட்டு பொது மக்கள் மறியல்
/
மழை நிவாரணம் கேட்டு பொது மக்கள் மறியல்
ADDED : டிச 13, 2024 07:29 AM

வானுார்: அரசு அறிவித்த மழை நிவாரண தொகை வழங்கக்கோரி எறையூரில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
வானுார் ஒன்றியத்தில் இன்னும் 30 கிராமங்களுக்கு அரசின் மழை, வெள்ள நிவாரண தொகை 2000 ரூபாய் வழங்கவில்லை.
இதை கண்டித்து, கடந்த 2 நாட்களுக்கு முன் எறையூரில் மறியலில் ஈடுபட்டனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, விரைந்து வழங்குவதாக உறுதி அளித்தனர்.
ஆனால் நிவாரணம் வழங்காததால், நேற்று மாலை 3:30 மணிக்கு, மீண்டும் பெரும்பாக்கம் - திருவக்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
வானுார் தாசில்தார் நாாரயணமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சிவராஜன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கலெக்டரிடம் பேசி வரும் 19ம் தேதிக்குள் நிவாரணம் வழங்க நடடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று பொது மக்கள் 5:30 மணியளவில் கலைந்து சென்றனர்.

