ADDED : நவ 14, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: சி.மெய்யூர் கிராமத்தில் இன்று நடக்க இருந்த, மக்கள் தொடர்பு திட்ட முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவெண்ணைநல்லூர் தாலுகா சி.மெய்யூர் கிராமத்தில், கலெக்டர் பழனி தலைமையில், இன்று (14ம் தேதி) வியாழக்கிழமை நடக்க இருந்த, மக்கள் தொடர்பு திட்ட முகாம், நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது. மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.