sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குடிநீர் வினியோகம் பாதிப்பு பொதுமக்கள் சாலை மறியல்

/

குடிநீர் வினியோகம் பாதிப்பு பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வினியோகம் பாதிப்பு பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர் வினியோகம் பாதிப்பு பொதுமக்கள் சாலை மறியல்


ADDED : அக் 01, 2024 07:16 AM

Google News

ADDED : அக் 01, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்: மரக்காணம் அடுத்த வெள்ளக்குளத்தில் சாலை பணியின் போது குடிநீர் பைப் லைனை சேதப்படுத்தியதை சரி செய்யாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டிவனம் - மரக்காணம் நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

மரக்காணம் அடுத்த வெள்ளக்குளத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் நான்கு வழிச் சாலை பணிக்காக சாலையின் இருபுறமும் அகலப்படுத்த பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.

அப்போது, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பைப்லைன் சேதமானது. இதனால் கடந்த 3 நாட்களாக வெள்ளக்குளம் பகுதியில் குடிநீர் வினியோகம் பாதித்தது.

இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை.

ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 7:00 மணிக்கு திண்டிவனம் - மரக்காணம் சாலை வெள்ளக்குளம் பஸ் நிறுத்தம் எதிரே மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த பிரம்மதேசம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 2 நாட்களில் புதிய பைப் லைன் போட்டு குடி நீர் சப்ளை செய்யப்படும் என உறுதியளித்ததன் பேரில் 8:00 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us