ADDED : டிச 13, 2024 07:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில், இந்த ஆண்டிற்கான மாவட்ட புள்ளியியல் கையேடு வெளியீடு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் கையேட்டை கலெக்டர் பழனி வெளியிட்டார். கையேட்டில், மாவட்டத்தில் அனைத்து துறைகளில் இருந்து பெறப்பட்ட புள்ளி விபரங்கள் மக்கள் தொகை, விவசாயம், கால்நடை, கல்வி, ஊரக வளர்ச்சி, மின்சாரம், போக்குவரத்து, தகவல் தொடர்பு, மழைநீர் தேக்க விபரங்கள், விலைப்புள்ளி விபரங்கள் இடம் பெற்றுள்ளது.
இந்த கையேடு பல துறைகளை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கலெக்டர் தெரிவித்தார். புள்ளியியல் துணை இயக்குநர் முத்துக்குமரன் உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

