/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சொகுசு காரில் சாராயம் கடத்தல் புதுச்சேரி ஆசாமி கைது
/
சொகுசு காரில் சாராயம் கடத்தல் புதுச்சேரி ஆசாமி கைது
சொகுசு காரில் சாராயம் கடத்தல் புதுச்சேரி ஆசாமி கைது
சொகுசு காரில் சாராயம் கடத்தல் புதுச்சேரி ஆசாமி கைது
ADDED : ஏப் 06, 2025 08:01 AM

வானுார் : புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு சொகுசு காரில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் நேற்று புதுச்சேரி - திண்டிவனம் சாலை, தைலாபுரம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற இன்னோவா காரை சோதனை செய்தனர். அதில், காருக்குள் புதுச்சேரி மதுபாட்டில்கள், சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.
காரை ஓட்டி வந்த நபரை விசாரித்தபோது, புதுச்சேரி, முத்தியால்பேட்டை செயின்ட் ரொசாரியோ தெருவைச் சேர்ந்த கவியரசன், 50; என்பதும், புதுச்சேரி பஸ் நிலையம் எதிரில் மதுபாட்டில்கள் வாங்கிக் கொண்டு சென்னையில் உள்ள நண்பரிடம் கொடுப்பதற்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
கவியரசனை கைது செய்து, கார் மற்றும் 48 மதுபாட்டில்கள், 110 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர்.