/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் சிப்காட் வளாகத்தில் காகிதகூழ் தொழிற்சாலை... அமைக்கப்படுமா?
/
திண்டிவனம் சிப்காட் வளாகத்தில் காகிதகூழ் தொழிற்சாலை... அமைக்கப்படுமா?
திண்டிவனம் சிப்காட் வளாகத்தில் காகிதகூழ் தொழிற்சாலை... அமைக்கப்படுமா?
திண்டிவனம் சிப்காட் வளாகத்தில் காகிதகூழ் தொழிற்சாலை... அமைக்கப்படுமா?
ADDED : அக் 09, 2024 04:15 AM
திண்டிவனம் : மாவட்டத்தில் சவுக்கு அதிகளவில் பயிரிடுவதால், திண்டிவனம் அருகே உள்ள சிப்காட் வளாகத்தில் காகிதக்கூழ் தயாரிக்கும் ஆலையை நிறுவ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 5 லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நெல், வேர்க்கடலை, உளுந்து, கம்பு, காய்கறி, பழமரங்கள் உள்ளிட்டவைகளை பயிரிட்டு வருகின்றனர்.
நெல், கரும்பு, வேர்க்கடலைக்கு அடுத்த படியாக சவுக்கை அதிகளவில் பயிரிடப்படுகிறது. சவுக்கு வறட்சியை சமாளிக்கும் திறன் கொண்டதால், வானுார், மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 25 ஏக்கருக்கும் மேல் சாகுபடி செய்யப்படுகிறது.
வழக்கமாக நெல், கரும்பு, வேர்க்கடலை போன்ற பயிர் வகைகளை சாகுபடி செய்ய ஆள் செலவும், இடு பொருட்கள் செலவும் அதிகரித்து கொண்டே வருகிறது.
இதுமட்டுமின்றி, அறுவடை நேரத்தில் விளைவித்த பயிர்களின் விலைகள் விவசாயிகள் எதிர்பார்த்த அளவிற்கு கிடைப்பதில்லை.
இயற்கை சீற்றம் காரணமாக உரிய மகசூல் கிடைப்பதில்லை என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இதனால், தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் துறையினரால், பரிந்துரை செய்யப்படாத சவுக்கு பயிரிடுவதில் விவசாயிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக வானுார், மயிலம், ஒலக்கூர், மரக்காணம், வல்லம் பகுதிகளில் அதிகளவில் சவுக்கு பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சவுக்கிற்கு நல்ல விலை கிடைப்பதே இதற்கு காரணமாகும்.
சவுக்கு பயிரிடும் பரப்பளவை அதிகரிக்கும் விதத்தில் வானுார் தாலுகா, காட்ராம்பாக்கத்தில் தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை நிறுவனம் (டி.என்.பி.எல்.,) சார்பில் 10 ஏக்கர் பரப்பளவில் சவுக்கு நர்சரி (நாற்றங்கால்) பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
வீரிய ஒட்டு ரகங்கள், ஸ்பீடு 5 போன்ற சவுக்கு ரகங்கள் 3 ஆண்டுகளில் நல்ல மகசூல் கொடுக்கிறது. ஒரு ஏக்கருக்கு 4 முதல் 5 லட்சம் ரூபாய் வரை விவசாயிகளுக்கு லாபமாக கிடைக்கிறது.
மாவட்டத்தில் விளையும் சவுக்கு மரங்கள், ஈரோடு பள்ளிப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் மற்றும் தனியார் வியாபாரிகள் மூலம் வாங்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், அதிக அளவில் சவுக்கு சாகுபடி செய்யப்படுவதால் திண்டிவனத்திற்கு அருகே உள்ள பெலாகுப்பம், கொள்ளார் கிராமங்களில் அமைந்துள்ள சிப்காட் வளாகத்தில் காகிதக்கூழ் தயாரிக்கும் ஆலை நிறுவினால் விவசாயிகளுக்கு மேலும் லாபகரமாக இருக்கும். போக்குவரத்து செலவும் மிச்சப்படும்.
சவுக்கு பயிரிடும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, சிப்காட் வளாகத்தில் காகிதக்கூழ் தயாரிக்கும் ஆலையை நிறுவதற்கு மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.