/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'ஓல்டை ' எல்லாம் ஓரங்கட்டு... கூடுதல் நிர்வாகிகளை நியமிக்க அ.தி.மு.க., தலைமை முடிவு?
/
'ஓல்டை ' எல்லாம் ஓரங்கட்டு... கூடுதல் நிர்வாகிகளை நியமிக்க அ.தி.மு.க., தலைமை முடிவு?
'ஓல்டை ' எல்லாம் ஓரங்கட்டு... கூடுதல் நிர்வாகிகளை நியமிக்க அ.தி.மு.க., தலைமை முடிவு?
'ஓல்டை ' எல்லாம் ஓரங்கட்டு... கூடுதல் நிர்வாகிகளை நியமிக்க அ.தி.மு.க., தலைமை முடிவு?
ADDED : நவ 11, 2025 06:31 AM

வி ழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., செயலாளராக இருப்பவர் சண்முகம். இவருடைய கட்டுப்பாட்டில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், செஞ்சி, மயிலம், திண்டிவனம் என 6 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளது.
இதே போல் தி.மு.க., தரப்பில் 6 சட்டசபை தொகுதிகளை தவிர கூடுதலாக திருக்கோவிலுார் தொகுதி என 7 சட்டசபை தொகுதிகள் வருகிறது. இதில் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு மஸ்தான், கவுதமசிகாமணி, லட்சுமணன் என 3 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். ஆனால், அ.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகம் மட்டுமே உள்ளார்.
இந்த சூழ்நிலையில், வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, கட்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர பணிகள், ஓட்டுச்சாவடி முகவர்கள் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த 5ம் தேதி சென்னையில் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
இதில் கட்சியை வலுப்படுத்தும் வகையில் பிரிக்கப்படாமல் உள்ள மாவட்டங்களில் கூடுதலாக 2 சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர்களை நியமிப்பது. கட்சியில் செயல்படாமல் உள்ள நிர்வாகிகள் மற்றும் வயதான நிர்வாகிகளை மாற்றிவிட்டு, இளைஞர்களை நிர்வாகிகளாக நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக விழுப்பு ரம் மாவட்டத்தில், அ.தி.மு.க., சார்பில் கூடுதலாக மாவட்ட செயலாளர்கள் நியமிப்பது குறித்து, கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் சண்முகத்திடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்திற்கு அ.தி.மு.க., சார்பில் கூடுதலாக மாவட்ட செயலாளர் நியமன அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கட்சியினர் எதி ர்பார்த் து காத்திருக்கின்றனர்.
அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் வயது மூப்பு, செயல்படாமல் உள்ள கட்சி நிர்வாகிகளை மாற்றிவிட்டு, புதியதாக நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக, கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

