/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தரமான நெல் விதைகள்: விவசாயிகள் கோரிக்கை
/
தரமான நெல் விதைகள்: விவசாயிகள் கோரிக்கை
ADDED : செப் 27, 2024 05:50 AM

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, வேளாண்மை துறை இணை இயக்குநர் (பொறுப்பு) சீனிவாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பிரேமலதா, செயற்பொறியாளர்(நீர்வள துறை) ஷோபனா உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில், விவசாயிகள் கூறியதாவது:
முண்டியம்பாக்கம், செம்மேடு ராஜஸ்ரீ சக்கரை ஆலைகள் 2013-14ம் ஆண்டு விவசாயிகளுக்கு கொடுக்க கூடிய எஸ்.ஏ.பி., தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பா பருவம் துவங்கவுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தேவைக்கேற்ப நெல் ரகங்களான பி.பி.டி., பொன்னி இருப்பு வைத்திட வேண்டும். தனியார் கடைகளில் விற்கும் நெல் விதைகளின் மாதிரி சேமித்து ஆய்வுக்கு உட்படுத்தி தரமான நெல் விதைகள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்திலும் விவசாயிகளுக்கு ஜிங்க் சல்பேட் உரமிருப்பு வைத்திட வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் கூறினர்.
பின், கலெக்டர் பழனி, கோரிக்கைளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து கால்நடை பராமரிப்பு துறை மூலம் செயல்படுத்தப்படும் மாநில, மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கையேடு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.