/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில்வே ஊழியரிடம் ரூ.18.50 லட்சம் மோசடி
/
ரயில்வே ஊழியரிடம் ரூ.18.50 லட்சம் மோசடி
ADDED : செப் 28, 2025 03:43 AM
விழுப்புரம்: ரயில்வே ஊழியரை ஆன்லைன் மூலம் ஏமாற்றி 18.50 லட்சம் ரூபாயை அபேஸ் செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம், வி.மருதுார் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் மோகன், 39; இவர், ரயில்வே துறையில் லோகோ பைலட்டாக பணிபுரிகிறார். இவரது மொபைல் போனுக்கு கடந்த ஜூன் 4ம் தேதி மர்ம நபர் ஒருவர் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு அவர் அனுப்பும் லிங்கிற்குள் சென்று சிறிய தொலையை முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக தெரிவித்துள்ளார்.
இதை நம்பி மோகன், தனது தந்தை முருகேசன் வங்கி கணக்கில் இருந்து மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு 10 ஆயிரம் ரூபாய் அனுப்பி 15 ஆயிரம் ரூபாய் சம்பாதித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு தவணைகளில் தனது வங்கி கணக்குகளில் இருந்து மொத்தம் 18 லட்சத்து 50 ஆயிரத்து 500 ரூபாயை கடந்த ஜூன் 23ம் தேதி முதல் ஜூலை 16ம் தேதி வரை மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
இதையடுத்து, மோகனுக்கு சேர வேண்டிய 3.5 கோடி ரூபாய் பணம் இருப்பதாக அவரது மெயிலில் காட்டியுள்ளது. இதை மோகன், எடுப்பதற்காக பார்த்தபோது 25 லட்சம் ரூபாய் கட்டினால் தான் பணத்தை திரும்ப பெற முடியும் என்ற தகவல் வந்துள்ளது.
அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மோகன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.