/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில்வே யூனியன் கிளை திறப்பு விழா
/
ரயில்வே யூனியன் கிளை திறப்பு விழா
ADDED : நவ 02, 2025 10:19 PM

விழுப்புரம்: தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் விழுப்புரம் கிளை அலுவலகம் திறப்பு விழா மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
நிர்வாகிகள் செல்வம், கமலக்கண்ணன் தலைமை தாங்கினர். செயலாளர் ஈஸ்வரதாஸ் வரவேற்றார். சங்க கொடியை சவுந்தர்ராஜன் ஏற்றினார். வீரராகவன் துவக்க உரையாற்றினார். மண்டல தலைவர் ஜானகிராமன் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் விழுப்புரம் கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார்.
நிர்வாகிகள் சிவக்குமார், கரிகாலன், ராஜா, மாதவன், சரவணன், பலராமன், வெங்கடேஷ், வேந்தன், மோகன்துரை, மூர்த்தி, கருப்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில், 30 சதவீதம் இடைக்கால நிவாரணத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்.
அனைத்து எல்.சி., கேட்களுக்கு 10 மணி நேரம் பணி வழங்க வேண்டும். சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியனுக்கு இணையாக தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியனுக்கு கிளைகள் துவங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேனகா நன்றி கூறினார்.

