/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் முகாம்
/
ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் முகாம்
ADDED : ஜூன் 28, 2025 12:57 AM

விக்கிரவாண்டி :  பட்டியலின குடும்பத்தினருக்கு ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் நடந்தது.
விக்கிரவாண்டி தாலுகாவில் வசிக்கும் பழங்குடியின குடும்பத்தினருக்கு, ரேஷன் கார்டு விண்ணப்பம் வழங்கும் முகாமிற்கு, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஷ் தலைமை தாங்கினார். ஆதார் கார்டுடன் உள்ள பட்டியல் இனத்தை சேர்ந்த குடும்பத்தினருக்கு, ரேஷன் கார்டுக்கான விண்ணப்பம் பெற்று, உடனடியாக அங்கீகரித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆதார் கார்டு இல்லாத குடும்பத்தினருக்கு ஆதார் கார்டு பெற விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
தொரவி, மதுரப்பாக்கம், தும்பூர், ஒரத்துார் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின இருளர் குடும்பத்தினர் முகாமில் பங்கேற்றனர். வருவாய் ஆய்வாளர்கள் தயாநிதி, நாகராஜன், வட்டபொறியாளர் சுரேஷ் கலந்து கொண்டனர்.

