ADDED : நவ 09, 2025 05:52 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 67 திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்டத்தில் இணையதள வழியில் பதிவு செய்யப்பட்ட 294 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 45 திருநங்கைகளுக்கு சொந்த தொழில் துவங்கிட தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 22 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஆண்டுதோறும் 40 வயதிற்கு மேற்பட்ட 50 திருநங்கைகளுக்கு ஓய்வூதியமாக 1,500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 67 திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 6 பேருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. 51 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாவும், 114 பேருக்கு மருத்துவ காப்பீடும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

