ADDED : பிப் 21, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரத்தில் வேனில் கடத்திய ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.விழுப்புரத்தில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு சப் இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று மாலை மாம்பழப்பட்டு சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த மினி ஆம்னி வேனில் 13 மூட்டைகளில் 520 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்ததை கண்டுபிடித்து வேனுடன் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, ரேஷன் அரிசி கடத்தி வந்த விழுப்புரம் சித்தேரிக்கரையை சேர்ந்த நாராயணன் மகன் மாணிக்கம்,35; என்பவரை கைது செய்தனர்.