/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரேஷன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது
/
ரேஷன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது
ADDED : டிச 23, 2025 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சேமங்கலம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தோஸ்த் மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், 1 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. உடன், லாரியில் வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சித்தலுார் கிராமத்தை சேர்ந்த கருப்பன் மகன் சொக்கநாதன், 19; முருகன் மகன் ஐயப்பன், 21; ஆகிய இருவரையும் கைது செய்து ரேஷன் அரிசி மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

