sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 ரேஷன் கடை பணியாளர்கள், கார்டுதாரர்கள்... அதிருப்தி கட்டுப்பாடற்ற பொருட்களை விற்க வலியுறுத்தல்

/

 ரேஷன் கடை பணியாளர்கள், கார்டுதாரர்கள்... அதிருப்தி கட்டுப்பாடற்ற பொருட்களை விற்க வலியுறுத்தல்

 ரேஷன் கடை பணியாளர்கள், கார்டுதாரர்கள்... அதிருப்தி கட்டுப்பாடற்ற பொருட்களை விற்க வலியுறுத்தல்

 ரேஷன் கடை பணியாளர்கள், கார்டுதாரர்கள்... அதிருப்தி கட்டுப்பாடற்ற பொருட்களை விற்க வலியுறுத்தல்


ADDED : பிப் 27, 2026 05:15 AM

Google News

ADDED : பிப் 27, 2026 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-நமது நிருபர்-:

விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு குறைவான பொருட்களை அனுப்புவதாலும், கட்டுப்பாடற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதாலும் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில், கூட்டுறவுத் துறையின் கீழ் 1,007 கடைகள் முழுநேரம் மற்றும் 247 பகுதி நேர கடைகள் என மொத்தம் 1,254 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. விற்பனையாளர்கள், எடையாளர்கள் என 860 பேர் பணியில் உள்ளனர். 147 பணியிடங்கள் காலியாக உள்ளது. ரேஷன் கடைகளுக்கு கூட்டுறவுத் துறை மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. இங்கிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களை ஏற்றுவதற்கு முன், குடோனில் எடை போட்டு அனுப்ப அரசாணை உள்ளது.

ஆனால், அப்படி எடை போட்டு அனுப்புவது இல்லை. இதனால், ஒரு கடையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு தேவையான சரியான பொருட்கள் இருப்பதில்லை. மூட்டைகளில் குறைவான பொருட்கள் உள்ளதால், பொதுமக்களுக்கு சரியான அளவில் அத்தியாவசிய பொருட்களை வழங்கப்படுவதில்லை.

இதனால், பொருட்களின் எடை அளவை நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஆய்வு செய்ய, கூட்டுறவு துறையில் பொது விநியோகத் திட்ட அதிகாரி பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அந்த அதிகாரி குடோனில் சென்று ஆய்வு செய்யாமல் ரேஷன் கடைகளுக்குச் சென்று ஆய்வு செய்கிறார். அப்போது, பொருட்கள் குறைவான எடையில் இருந்தால் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால், செய்யாத தவறுக்கு நாங்கள் பலிகடா ஆவதா என பணியாளர்கள் புலம்பி வருகின்றனர்.

இதேபோன்று, ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். மக்களுக்கு தேவையில்லாத தரமற்ற பொருட்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி, அதனை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

அதாவது, அத்தியாவசிய பொருட்களைத் தவிர்த்து குளியல் சோப்பு, துணி துவைக்கும் சோப்பு, சேமியா, பெருங்காயம், மஞ்சள் துாள், உப்பு, கோதுமை மாவு உள்ளிட்ட பொருட்களையும் விற்பனை செய்கின்றனர்.

ஒரு ரேஷன் கார்டுக்கு கட்டாயம் 30 ரூபாய் மதிப்பிலான கட்டுப்பாடற்ற பொருட்களை விற்க வேண்டும் என விற்பனையாளர்களுக்கு டார்கெட் கொடுத்துள்ளனர். அப்படி இல்லையென்றால், அந்த பொருட்களுக்கான பணத்தை விற்பனையாளர்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்கின்றனர்.

இதனால், பொதுமக்களை கட்டாயப்படுத்தி அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் 10 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த பொருட்கள் ரேஷன் கடைகளில் 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரேஷன் கடைகளில் கட்டுபாடற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என கூட்டுறவுத் துறை சார்பில் விளம்பரம் செய்கின்றனர். ஆனால், பொருட்களை விற்பனை செய்ய மறைமுகமாக உத்தரவிட்டுள்ளது பொதுமக்கள், பணியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ரேஷன் கடை பணியாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில் பொருட்களை பொட்டலங்களாக வழங்க தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், இதுவரை வழங்கவில்லை.

கட்டுப்பாடற்ற பொருட்கள் காலாவதியானால், பணியாளர்களிடம் அதற்கான பணத்தை வசூலிக்கின்றனர். தாயுமானவர் திட்டத்தில் பொருட்களை வழங்க ஒரு ரேஷன் கார்டுக்கு அரசு 40 ரூபாய் வழங்குகிறது. இந்த தொகையில் வாகன வாடகை கொடுக்க வேண்டும்.

ஆனால், மாவட்டத்தில் உள்ள 60 சதவீத கடைகளுக்கு இந்த தொகையை அதிகாரிகள் கொடுப்பதில்லை. ரேஷன் கடை விற்பனையாளர்களே, வாகன வாடகை செலுத்தும் நிலை உள்ளது. கடைகளில் நாற்காலிகள், டேபிள்கள் சேதமடைந்துள்ளது. புதிதாக நாற்காலிகள், டேபிள்கள் வாங்கிக்கொடுக்க அரசு உத்தரவிட்டும், அதிகாரிகள் வாங்கி கொடுக்காமல் உள்ளனர்' என்றார்.

அத்தியாவசிய பொருட்களை தரமாகவும், சரியான எடையில் வழங்க வேண்டிய கூட்டுறவுத் துறை அதிகாரிகளின் அலட்சிய செயல்களால் மாவட்ட மக்களிடையேவும், ரேஷன் கடை பணியாளர்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us