/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வரி விழிப்புணர்வு கருத்தரங்கு
/
வரி விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : பிப் 27, 2026 04:49 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில், மாவட்ட தொழில் மையம், மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் சங்கம் மற்றும் தென்னிந்திய வரி பயிற்சியாளர்கள் சங்கம் சார்பில் ஜி.எஸ்.டி., (சரக்கு மற்றும் சேவை வரி), ஐ.டி., (வருமான வரி) விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கிற்கு, மாவட்ட குறு மற்றும் சிறு தொழில் சங்க கவுரவ தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கினார். தலைவர் கருணாநிதி வரவேற்றார்.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அருள், சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ராமகிருஷ்ணன், பொது செயலாளர் பிரேம்நாத், தென்னிந்திய வரி பயிற்சியாளர் சங்க தலைவர் வெங்கடேஸ்வரன், செயலாளர் சத்யராஜ், செயற்குழு உறுப்பினர் தாரணி நரசிம்மன், கடலுார் மாவட்ட தலைவர் அசோக், சுகுமார் சிறப்புரையாற்றினர்.
கருத்தரங்கில், குறு, சிறு தொழில்களில் சரக்கு மற்றும் சேவை வரி, வருமான வரியில் உள்ள குறை, நிறை மற்றும் விதிமுறைகள், இதை வியாபாரிகள் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஆகியவை பற்றி பயிற்சியாளர் சுப்ரமணியன் விளக்கமளித்தார்.
குறு மற்றும் சிறு தொழில் சங்க செயலாளர் சாம்பசிவம் நன்றி கூறினார்.

