ADDED : மார் 14, 2024 06:09 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம் : விழுப்புரத்தில் நியாவிலை கடை பணியாளர் சங்கத்தினர் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலர் சம்பத் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பழனிவேல், கதிர்வேல், கோபிநாதன், குணசேகரன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் கோபிநாத் கண்டன உரையாற்றினார்.
ரேஷன் கடைகளுக்கு சரியான எடையில், தரமான பொருள்களை பொட்டலங்களாக அரசு வழங்க வேண்டும். கட்டாய இறக்கு கூலி வசூலிப்பதை தடுக்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு புதிய தொழில் நுட்ப பி.ஓ.எஸ்., விற்பனை சாதனங்களை வழங்க வேண்டும். ரேஷன் கடை பணியாளர்களிடம் பிடித்தம் செய்யும் பி.எப்., நிதியை, முறையாக அதன் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
