/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டம்
/
ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டம்
ADDED : பிப் 13, 2026 04:37 AM
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 3ம் நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு, வட்டார தலைவர் புஷ்பகுமார் தலைமை தாங்கினார்.
செயலாளர் கண்ணன், கவுரவ தலைவர் குமார், பொருளாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில், பொது வினியோக திட்டத்திற்கென தனித்துறையை உருவாக்க வேண்டும்.
மகளிர் நடத்தும் ரேஷன் கடைகளை ஒரு துறையின் கீழ் கொண்டு வந்து ஊதியம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
நேரடியாக எழுத்தர் பதவி உயர்வு வழங்கிவிட்டு பிறகு மாவட்ட ஆள்சேர்ப்பு மையம் மூலம் காலி பணியிடம் நிரப்பட வேண்டும்.
பிப்ரவரி இறுதிக்குள் புதிய ஊதிய மாற்ற அறிவிப்பை வெளியிடப்பட வேண்டும் என்பது உட்பட 15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வட்டார துணைத் தலைவர் அறிவழகன், ஒன்றிய செயலாளர் ரங்கபாஷ்யம் உட்பட பலர் பங்கேற்றனர்.

