/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளியில் இடைநின்ற மாணவர் கலெக்டர் உத்தரவால் மீண்டும் சேர்ப்பு
/
பள்ளியில் இடைநின்ற மாணவர் கலெக்டர் உத்தரவால் மீண்டும் சேர்ப்பு
பள்ளியில் இடைநின்ற மாணவர் கலெக்டர் உத்தரவால் மீண்டும் சேர்ப்பு
பள்ளியில் இடைநின்ற மாணவர் கலெக்டர் உத்தரவால் மீண்டும் சேர்ப்பு
ADDED : பிப் 21, 2024 02:12 AM

விழுப்புரம் : வழுதரெட்டி அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில், இடைநின்ற மாணவர் கலெக்டர் உத்தரவின் பேரில் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
விழுப்புரம் நகராட்சியில், மக்களின் கூட்டம் நிறைந்த பொது இடத்தில் தேவா என்ற சிறுவன் கையில் சில பொருட்களை வைத்து கொண்டு விற்பனை செய்வதாக சமூக வலை தளங்களில் வைரலானது.
இதையறிந்த கலெக்டர் பழனி, இது தொடர்பான உண்மைத் தன்மை அறிந்து தகவல் தெரிவிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன் பேரில், தேவா என்ற சிறுவன், பூந்தோட்டம் அரசு உயர்நிலை பள்ளியில் 6ம் வகுப்பு படித்து குடும்ப சூழல் காரணமாக இடை நின்றது தெரியவந்தது. தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், உதவி திட்ட அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார வள மேற்பார்வையாளர்கள் மூலம் சிறுவன் மீட்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சிறுவன் தேவா, வழுதரெட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு சேர்க்கப்பட்டார்.
பள்ளியில் அவருக்கு விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கப்பட்டது.
மாணவரை, தொடர்ந்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என பெற்றோரிடம் அறிவுறுத்தியதுடன், கல்வியின் அவசியம், அரசால் வழங்கப்படும் திட்டங்கள், சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

