ADDED : செப் 18, 2025 03:43 AM

செஞ்சி: செஞ்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம், தலைவர் விஜயகுமார் தலைமையில் நடந்தது.
பி.டி.ஓ., நடராஜன் முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய நிர்வாகத்தின் வரவு செலவு கணக்குகள் படிக்கப்பட்டன, என்.ஆர்.பேட்டை, கோணை, பாக்கம், பாலப்பட்டு, மேல் அருங்குணம் உள்ளிட்ட ஊராட்சிகளில் சிமெண்ட் சாலை, சிறுபாலம், தடுப்பு சுவர், ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் வசதிகள் செய்ய, ரூ.32 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் புதிய பணிகள் தேர்வு செய்யப்பட்டன.
இதில் பேசிய ஒன்றிய சேர்மன் விஜயகுமார், 'வெளிநாடுகளுக்கு சென்று தமிழகத்தில் ரூ.15 ஆயிரத்து 516 கோடி புதிய தொழில் முதலீட்டை கொண்டு வந்ததற்கும், தாயுமானவர் திட்டத்தில் வயதானவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கும், தாய் தந்தை இல்லாத குழந்தைகளுக்கு அன்பு கரங்கள் திட்டம் மூலம் மாதம் 2000 ரூபாய் வழங்கியுள்ளதற்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,' என்றார்
அடுத்து பேசிய அ.தி.மு.க., கவுன்சிலர் துரை, அவரது பகுதிக்கு பணிகளை ஒதுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதில் துணை சேர்மன் ஜெயபால் கவுன்சிலர்கள், பச்சையப்பன், கேமல், செண்பக பிரியா, கமலா, முரளி, மல்லிகா, பனிமலர், ஞானாம்பாள், உமாமகேஸ்வரி, அலமேலு, பனிமலர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
துணை பி.டி.ஓ., சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.