/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணை கண்டுபிடிப்பதில் தாமதம் உறவினர்கள் சாலை மறியல்
/
பெண்ணை கண்டுபிடிப்பதில் தாமதம் உறவினர்கள் சாலை மறியல்
பெண்ணை கண்டுபிடிப்பதில் தாமதம் உறவினர்கள் சாலை மறியல்
பெண்ணை கண்டுபிடிப்பதில் தாமதம் உறவினர்கள் சாலை மறியல்
ADDED : ஏப் 01, 2025 04:30 AM

செஞ்சி: காணாமல் போன பெண்ணை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் போலீசாரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேல்மலையனுார் அடுத்த மானந்தல் மோட்டூர் கிராமத்தைச் சார்ந்தவர் ஏழுமலை மகள் தமிழ்மொழி, 22: பி.எஸ்சி., பட்ட தாரி. இவர் செஞ்சியில் உள்ள மெடிக்கலில் வேலை செய்து வந்தார்.
கடந்த 26ம் தேதி இரவு வேலை முடிந்து சென்றவர் வீட்டிற்குச் செல்லவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை ஏழுமலை செஞ்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பெண்ணை மீட்டுக் கொடுக்க தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர் கள் மற்றும் அப்பகுதி மக்கள் 300க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11:45 மணிக்கு செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் கடலாடிகுளம் கூட்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த நல்லாண்பிள்ளை பெற்றாள் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற் படாததால் டி.எஸ்.பி., கார்த்திகா பிரியா சம்பவ இடத்திற்கு சென்று, மாலை 4:00 மணிக்கு காணாமல் போன பெண்ணை உறவினர் முன் ஆஜர் படுத்துவதாக உறுதியளித்தார்.
இதையடுத்து அனைவரும் 1:15 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

