/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கனமழையால் பாதித்த அனைவருக்கும் நிவாரணம்: கலெக்டரிடம் தி.மு.க., மனு
/
கனமழையால் பாதித்த அனைவருக்கும் நிவாரணம்: கலெக்டரிடம் தி.மு.க., மனு
கனமழையால் பாதித்த அனைவருக்கும் நிவாரணம்: கலெக்டரிடம் தி.மு.க., மனு
கனமழையால் பாதித்த அனைவருக்கும் நிவாரணம்: கலெக்டரிடம் தி.மு.க., மனு
ADDED : டிச 11, 2024 05:31 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயலில் பாதித்த அனைவருக்கும், அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென, தி.மு.க., வினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி தலைமையிலான அக்கட்சி நிர்வாகிகள், கலெக்டர் பழனியை நேரில் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில், ' அரசின் வெள்ள நிவாரண பொருள் மற்றும் 2,000 ரூபாயை பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும், விடுபடாமல் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து கவுதம சிகாமணி நிருபர்களிடம் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டுமென அமைச்சர் பொன்முடி, முதல்வரை சந்தித்து வலியுறுத்தியுள்ளார். அதன்படி, மாவட்டத்தில், மேலும் 1 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரணம் வழங்க ஒப்புதல் தெரிவித்து வழங்கப்பட உள்ளது. இதனால், 5.25 லட்சம் பேருக்கு வழங்கப்படும்.
ஆனால், அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சியினர், பொது மக்களை திசைதிருப்பி போராட்டத்தில் ஈடுபட்டு, நிவாரணங்களை அவர்கள் தான் பெற்றுத் தருவதுபோல் விஷம பிரசாாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புயல், கனமழையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், நிவாரணம் கிடைத்திட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனை முழுமையாக வழங்குமாறு, கலெக்டரை சந்தித்து, மனு கொடுத்துள்ளோம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர் இளந்திரையன், நகர செயலாளர் சக்கரை, பேரூராட்சி செயலாளர் ஜீவா, ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, பிரபாகரன், மைதிலி, நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி உடனிருந்தனர்.