/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம்
/
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம்
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம்
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம்
ADDED : ஜூலை 07, 2025 02:06 AM

விழுப்புரம், ஜூலை 7-
வளவனுாரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை லட்சுமணன் எம்.எல்.ஏ., வழங்கினார்.
விழுப்புரம் அருகே வளவனுார், அம்பேத்கர் நகரில் சமீபத்தில், மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், நாகப்பன், கருணாகரன், பாபு ஆகியோரின் கூரை வீடுகள் சேதமடைந்தன.
இந்நிலையில் லட்சுமணன் எம்.எல்.ஏ., அந்த பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி அரிசி, காய்கறி, மளிகை, துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவிகளை வழங்கினார்.
தாசில்தார் கனிமொழி, பேரூராட்சி சேர்மன் மீனாட்சி, நகர செயலாளர் ஜீவா, பொதுக்குழு உறுப்பினர் சம்பத், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், அவைத் தலைவர் சரபோஜி, துணைத் தலைவர் அசோக், நகர துணை செயலாளர் கந்தசாமி, வார்டு செயலாளர் சிசுபாலன், ஆனந்தன், கவுன்சிலர்கள் வடிவேல், கீதா செந்தில், தகவல் தொழில்நுட்ப அணி ராஜேஷ், நகர இளைஞரணி டேவிட், முணிஷ், அப்பு, ஸ்ரீதர், கோவிந்தசாமி, முருகன், சரவணன், அனுபிராகாஷ், தீர்த்தமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.