நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி காசி விஸ்வநாதர் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள சிறப்பு வழிபாடு நடந்தது.
செஞ்சி சிறுகடம்பூரில் உள்ள 800 ஆண்டு பழமையான விசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் கோவிலை 2 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் செய்து புதுப்பிக்க உள்ளனர். இதற்கான பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. அதனையொட்டி, முன்னிட்டு கலச பிரதிஷ்டை செய்து சிறப்பு ஹோமம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு திருப்பணிக்குழு தலைவர் பாபு தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். செயலாளர் சங்கர், பொருளாளர் அய்யப்பன், துணைத்தலைவர்கள் பாலகிருஷ்ணன், துரைக்கண்ணு, இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர் நாராயணன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.