/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சேதமான டி.வி.,நல்லுார் - எல்லீஸ்சத்திரம் சாலை சீரமைக்கும் பணிகள் தீவிரம்

ADDED : டிச 05, 2024 07:12 AM

திருவெண்ணெய்நல்லுார்: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட திருவெண்ணெய்நல்லுார் - எல்லீஸ் சத்திரம் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவெண்ணெய்நல்லுாரிலிருந்து - எல்லீஸ் சத்திரம் சாலையை அப்பகுதியை சேர்ந்த சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பிரதான சாலையாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 ம் தேதி மலட்டாற்றில் வெள்ளம் அதிகரித்தால் மலட்டாற்றின் குறுக்கே சென்ற திருவெண்ணெய்நல்லுார் - எல்லீஸ் சத்திரம் பிரதான சாலை உடைந்து கொண்டு தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் அவ்விழியாக செல்ல முடியாமல் அவதியடைந்து வந்தனர். இதனை கண்டித்து மக்கள் நேற்று காலை மறியல் போராட்டம் நடத்தினர். அதன் எதிரொலியாக நேற்று மதியம் முதல் அப்பகுதியில் ஹீட்டாட்சி மற்றும் ஜே.சி.பி., யை கொண்டு கிராவல் மணலை கொட்டி சாலை சீரமைக்கும் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.