/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டு மனைப்பட்டா கேட்டு கோரிக்கை மனு
/
வீட்டு மனைப்பட்டா கேட்டு கோரிக்கை மனு
ADDED : ஜூலை 10, 2025 09:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; ஆவுடையார்பட்டு கிராம இருளர்கள், வீட்டு மனைப் பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனு விபரம்:
ஆவுடையார்பட்டு கிராமத்தில் அரசு நத்தம் புறம்போக்கு இடம் உள்ளது. இதன் அருகே 50 பேர் வசிக்கின்றோம்.
ஆனால், ரெட்டிக்குப்பம் கிராமத்தில் வசிக்கும் குடும்பத்தினருக்கு, எங்கள் கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்க இடம் தேர்வு செய்துள்ளனர்.
ஆனால், கயத்துாரில், அரசு புறம்போக்கு இடம் உள்ளது. அதனால், அவர்களுக்கு கயத்துாரிலும், எங்கள் கிராமத்தில் உள்ள எங்களுக்கும் மனைப்பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

