/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்ட கோரிக்கை
/
வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்ட கோரிக்கை
ADDED : செப் 20, 2025 06:52 AM

அவலுார்பேட்டை : வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டடம் சேதமடைந்ததால் புதிய கட்டடம் கட்டடம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
மேல்மலையனுார் தாலுகா அவலுார்பேட்டை குறுவட்டத்தில், வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டடம் சேதமடைந்து, பலவீனமடைந்தது.
இதனால் ஊராட்சியின் நுாலக கட்டடத்தின் ஒரு புறத்தில் கடந்த, 3 ஆண்டுகளாக தற்காலிகமாக அலுவலகம் செயல்பட்டது.
25 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய குறுவட்டத்தில் 12 வி.ஏ.ஓ.,க்கள் , 21 கிராம உதவியாளர்கள் உள்ள நிலையில் கடந்த, 17ம் தேதி, அந்த அலுவலகத்தை ஒரு வாரத்திற்குள் காலி செய்ய வேண்டும் என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்தது.
இதையடுத்து, வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டடம் மீண்டும் தற்காலிகமாக செயல்பட வருவாய் துறையினர் புதிய இடத்தை தேடி வருகின்றனர்.
பழுதடைந்த பழைய அலுவலக கட்டடம் மாடுகளை கட்டுவதற்கும், வைக்கோல் வைப்பதற்குமான இடமாக மாறியுள்ளது.
இங்கு புதிதாக வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டடம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.