/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சங்கராபரணி - தென்பெண்ணை ஆறு பகுதிகளில் அகழாய்வு செய்ய கோரிக்கை
/
சங்கராபரணி - தென்பெண்ணை ஆறு பகுதிகளில் அகழாய்வு செய்ய கோரிக்கை
சங்கராபரணி - தென்பெண்ணை ஆறு பகுதிகளில் அகழாய்வு செய்ய கோரிக்கை
சங்கராபரணி - தென்பெண்ணை ஆறு பகுதிகளில் அகழாய்வு செய்ய கோரிக்கை
ADDED : ஜன 30, 2025 12:18 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் சங்கராபரணி - தென்பெண்ணை ஆற்று பகுதிகளில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும்'' என முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் நேற்று முன்தினம் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், 'மாவட்டத்திற்குட்பட்ட தென்னமாதேவி, அயினம்பாளையம் கிராமங்களில், பம்பை ஆற்றின் வடகரையில், சங்ககால பொருட்கள் கண்டறியப்படுகிறது. இப்பகுதிகளில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்' என கூறினார்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட வரலாறு மற்றும் பண்பாட்டு பேரவை ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
விழுப்புரம் பம்பை ஆற்று பகுதியில் அகழாய்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்ட முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். நீண்ட இடைவெளிக்கு பின், விழுப்புரம் மாவட்டத்தில் அகழாய்வு பணிகள் துவங்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த மாவட்டத்தில் சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள செ.கொத்தமங்கலம். தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள எஸ்.மேட்டுப்பாளையம் (பூவரசங்குப்பம்), கள்ளக்குறிச்சி மாவட்டம், பரிக்கல் ஆகிய இடங்களில் எழுத்து மற்றும் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள், போர் வீரர்கள் பயன்படுத்திய வாள் உள்ளிட்ட பொருட்கள் கடந்த காலங்களில் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த இடங்கள் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்வியல், வரலாற்று தடயங்கள் நிறைந்த பகுதிகளாகும். இந்த இடங்களில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு செய்தால் பழந்தமிழ் வரலாற்றுக்கு வலு சேர்க்கும் பல்வேறு ஆதாரங்கள் கிடைக்கக்கூடும். இதற்கு முதல்வர், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.