ADDED : நவ 30, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : பையூரில் குடியிருந்து வரும் பழங்குடியினர், தங்களுக்கு இலவச மனை பட்டா வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு, கோவிந்தராஜ் தலைமையில் அளித்துள்ள மனு:
திருவெண்ணைநல்லுார் அடுத்த பையூர் கிராமத்தில், அரசு வாய்க்கால் புறம்போக்கில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 10 பழங்குடி இருளர் குடும்பத்தினர், குடியிருந்து வருகிறோம்.
நாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு இலவச மனை பட்டா வழங்க வேண்டும் என தொடர்ந்து பல முறை, தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகத்திலும், பழங்குடி ஆணையத்திற்கும் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.