/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாக்க கோரிக்கை
/
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாக்க கோரிக்கை
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாக்க கோரிக்கை
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாக்க கோரிக்கை
ADDED : மே 21, 2025 11:21 PM

விழுப்புரம்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், மழையில் நெல் மூட்டைகள் நனைந்து வீணாகுவதை தடுக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முருகன் தலைமையிலான விவசாயிகள், விழுப்புரம் கலெக்டரை சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில்;
விழுப்புரம் மாவட்டத்தில், விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, 92 இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறந்து, அரசு நிர்ணயித்த விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நெல் மூட்டைகள் இருப்பு வைக்கும் தற்காலிக கொட்டகை கூட இல்லாமல், திறந்தவெளி களங்களில் நேரடிநெல்கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு, 6000 முதல் 7000 மூட்டைகள் குடோன்கள் அல்லது மில்களுக்கு எடுத்துசெல்லாமல் இருப்பு வைத்து அடுக்கி வைத்துள்ளனர்.
தற்போது பெய்து வரும் கோடை மழையில், பெரும்பாலான இடங்களில் நெல் மூட்டைகள் நனைந்து பாதித்துள்ளது. நெல் கொள்முதலும் நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும், நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் எடுக்கப்படும் நெல் மூட்டைகளை, உடனடியாக எடுத்துசெல்வதற்கு போதிய வாகன வசதியும் இல்லை.
எனவே, நெல் மூட்டைகளை விழுப்புரம், செஞ்சி, குண்டலப்புலியூர் குடோனில் வைப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் முயற்சிக்க வேண்டும். தினசரி கொள்முதல் செய்யும் நெல் மூட்டைகளை வாகனங்கள் மூலம் அன்றே எடுத்துசெல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.