ADDED : அக் 08, 2025 11:08 PM

வானுார்: தைலாபுரம் கிராமத்தில் தினை விதைப்பண்ணை வயலை, விழுப்புரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம், வேளாண்மை துறை மூலம், சிறுதானியங்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், உற்பத்தி திறனை உயர்த்தவும், சத்தான சிறு தானியங்கள் சாகுபடி செய்ய, தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மற்றும் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாற்று பயிர் சிறுதானியங்கள் சாகுபடி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதற்கு தேவையான விதைகளை விவசாயிகளிடமிருந்து, தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை மூலம் கொள்முதல் செய்து மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தைலாபுரம் கிராமத்தில், 5 ஏக்கர் பரப்பளவில் அரிராம் விவசாயி, தினை விதை பண்ணை, (அத்தியந்தல்-1) புதிய ரகத்தின் செயல்திறன் குறித்து விழுப்புரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று உதவி இயக்குநர் பாலசுப்ரமணியன் ஆய்வு செய்தார்.
இதிலிருந்து கொள்முதல் செய்யப்படும் தினை விதைகள், மாவட்டத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு ராபி பருவத்தில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ், உதவி விதை அலுவலர் மோகன் குமார், உதவி வேளாண்மை அலுவலர் விஜயலட்சுமி , உதவி தொழில் நுட்ப மேலாளர் சந்திரசேகர் மற்றும் விவசாயி ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.