ADDED : அக் 08, 2025 11:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: ரங்கநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மாநில திட்ட இயக்கம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் கராத்தே தற்காப்புக்கலை பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி வானுார் அடுத்த ரங்கநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு கராத்தே தற்காப்புக்கலை பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் விஜயசாந்தி தலைமை தாங்கினார். கராத்தே மாஸ்டர் சுரேஷ், மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மதி பூஷணம், இளவரசி, கருணாநிதி, கனிமொழி உள்ளிட்டோர், கலந்து கொண்டனர்.