ADDED : அக் 08, 2025 11:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.
விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலையில் உள்ள மின்வாரிய மண்டல பொறியாளர் அலுவலகம் முன், மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர்.
இதில், மின்வாரியத்தில் கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
நேற்று இரண்டாவது நாளாக இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.