/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டின் அருகே மின் கம்பம் நட எதிர்ப்பு; வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

ADDED : அக் 26, 2024 07:35 AM

வானுார் : வீட்டின் அருகே மின்கம்பம் நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
வானுார் அடுத்த ராவுத்தன்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன். இவரது வீட்டின் அருகே மின் கம்பம் அமைக்கும் பணிக்காக நேற்று காலை 10:30 மணியளவில் மின்வாரிய ஊழியர்கள் ஜே.சி.பி., இயந்திரத்துடன் வந்தனர்.
அப்போது, தங்கள் வீட்டின் முன் மின் கம்பம் அமைக்க அறிவழகன், அவரது மனைவி மற்றும் இரு மகன்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வீடு கட்ட இருப்பதால் அந்த இடத்தின் எதிரே மின் கம்பம் நட வேண்டாம் என மின் வாரிய அதிகாரியிடம் மனு அளித்துள்ளோம் என தெரிவித்தனர்.
ஆனால், மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பம் அமைப்பதற்கு பள்ளம் எடுக்கத் துவங்கினர். இதனால், ஆத்திரமடைந்த அறிவழகனின் இளைய மகன் அருண், 32; திடீரென மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைக்க முயன்றார்.
உடன் அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார், அருணை தடுத்து நிறுத்தினர்.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து, மின்வாரிய ஊழியர்கள் பணியை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.