/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திரும்ப பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள்... 63.92 சதவீதம்; திருத்தப்பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்
/
திரும்ப பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள்... 63.92 சதவீதம்; திருத்தப்பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்
திரும்ப பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள்... 63.92 சதவீதம்; திருத்தப்பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்
திரும்ப பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள்... 63.92 சதவீதம்; திருத்தப்பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்
ADDED : நவ 26, 2025 07:19 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், மொத்த வாக்காளர்கள் பட்டியலில் உள்ள 17 லட்சத்து27 ஆயிரத்து 490 வாக்காளர்களில், 16 லட்சத்து 59 ஆயிரத்து 265 பேருக்கு கணக்கெடுப்பு படிவம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில், 11 லட்சத்து 4 ஆயிரத்து 163 பேர்(63.92 சதவீதம்) வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்து அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள், கடந்த 4ம் தேதி துவங்கியது. மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் உள்ள ஆயிரத்து 970 ஓட்டுச்சாவடிகளுக்கும், தலா ஒரு ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் மூலம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், நேரடியாக மேற்பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
இதன்படி, நேற்று பிற்பகல் வரை செஞ்சி சட்டசபை தொகுதியில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 780 படிவங்கள், மயிலம் தொகுதியில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 782 படிவம், திண்டிவனம் தொகுதியில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 386 படிவம், வானுார் தொகுதியில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 822 படிவம், விழுப்புரம் தொகுதியில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 52 படிவம், விக்கிரவாண்டி தொகுதியில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 343 படிவம், திருக்கோவிலுார் தொகுதியில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 100 படிவம் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் 17 லட்சத்து 27 ஆயிரத்து 490 பேரில், 16 லட்சத்து 59 ஆயிரத்து 265 பேருக்கு, கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது.
மொத்த வாக்காளர்க ளில் 96.05 சதவீதம் பேருக்கு படிவங்கள் வழங்கும் பணி நிறைவடைந்து ள்ளது. மாவட்டத்தில் 68 ஆயிரத்து 225 வாக்காளர்களுக்கு மட்டுமே கணக்கெடுப்பு படிவம் வழங்க வேண்டியுள்ளது.
மாவட்டத்தில் 11 லட்சத்து 4 ஆயிரத்து 163 பேர் (63.92 சதவீதம்) வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்து திரும்ப அளித்துள்ளனர். இவர்களில், ஆயிரத்து 806 வாக்காளர்கள், ஆன்லைன் மூலம் கணக்கெடுப்பு படிவத்தை பதிவு செய்துள்ளனர்.
மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை திட்டமிட்டபடி, டிச.4ம் தேதிக்குள் முழுமையாக முடிப்பதற்கு அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

